செல்வம் பெறுக இந்த மரம் இருந்தாலே போதும்- Sattaimuni Nathar | Siththarkal

உங்கள் வீட்டின் உள் இந்த மரம் மட்டும் நட்டுவையுங்கள் போதும் செல்வம் பெருகும்.

வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் நேர்மறை எண்ணங்களை கொண்டவர்களாக இருந்தாலே போது வீட்டில்
எப்போதும் நேர்மறை சக்தி அதிகமாக இருக்கும். இந்த சக்தியே நம் வீட்டின் கஷ்டங்களை கடந்து வாழ்க்கையில் செழிப்போடு இருக்க உதவும். நம்மை சுற்றி உள்ள பொருள்கள் அதில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வீட்டில் மரம் வளர்ப்பது நமக்கும் நல்லது சமூகத்திற்கும் நல்லது. உங்கள் வீட்டில் என்ன மரம், செடி இருந்தாலும் இந்த ஒரு மரத்தை மட்டும் நட்டு வளர்த்து பாருங்கள். உங்கள் வீட்டில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு செல்வம் சேர்வதை கண்கூடாக பார்க்கலாம்.காட்டு நெல்லி எனப்படும் பெரிய நெல்லிக்காய் மரம் தான் அது.
நெல்லி மரம் மஹாலக்ஷ்மியின் உள்ளங்கையில் வாசம் செய்வது அத்தகைய மரத்தை நாம் வீட்டில் வைத்து வளர்த்து வணங்கி வந்தால் செல்வம் அதிகமாக சேரும்.நெல்லிகாய் அறுசுவையும் தன்னுள் கொண்டது. நெல்லி காய் சாப்பிட்டு விட்டு கடையிசில் தண்ணீர் குடிக்கும் போது இனிக்கும். அதுபோல் நம் வாழ்க்கையில் எல்லா கஷ்டத்தையும் கடந்து இனிமையான வாழ்வை அடைவதை குறிக்கிறது.புதன் அல்லது வெள்ளிகிழமைகளில் நெல்லிக்காயை தலையில் தேய்த்து குளித்து விட்டு தங்கநகை வாங்கினால் தங்கநகைகள் அதிக அளவில் சேரும்.

ஆன்மிகம் ஒரு பக்கம் இருந்தாலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. மேலும் நெல்லிக்காய் அடிக்கடி உண்டு வந்தால் என்றும் இளமையாக இருக்கலாம்.

பெண்களுக்கு கருமையான கூந்தல் வளர்வதுக்கு உதவுகிறது.

ஒரு நெல்லி மரத்தை வாங்கி உங்க வீட்டில் வைத்து வளர்த்து பாருங்கள். நல்ல மாற்றங்கள் நடைபெறுவதை பார்க்கலாம்.
   

No comments

Powered by Blogger.