இது இருந்தாலே வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் | Sattaimuni Nathar


வீட்டில் எந்தெந்த பொருட்களை எந்தெந்த திசைகளில் வைக்க வேண்டும் என தெரியுமா?

ஒவ்வொரு வாஸ்து அறிவுரையின் பின்னாலும் ஒரு அறிவியல் பூர்வமான உண்மை உள்ளது. நீங்கள் நம்பினாலும், நாம்பாவிட்டாலும் வாஸ்து சாஸ்திரம் அதன் பலன்களை நிச்சயம் வெளிப்படுத்தும்.


இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள சில சின்ன சின்ன மாற்றங்களை உங்களது வீட்டில் செய்வதன் மூலம் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கையை நீங்கள் பெறலாம்..

சாலையின் புகைபடம்:


நல்ல பார்வை மற்றும் திட்டமிட்டு செயல்படும் திறன் மேம்பட, நீளமான சாலை இருப்பது போன்ற புகைப்படத்தை வடமேற்கு திசையில் வைக்கலாம்.

குடும்ப புகைப்படங்கள்:


உங்களது குடும்ப புகைப்படங்களை மஞ்சள் அல்லது தங்க நிற பிரேம் போட்டு தென் மேற்கு திசையில் வைக்கலாம்.
இது ஒற்றுமையாக ஆரோக்கியமான உறவுகள் நீடிக்க உதவும்.

சூரிய உதயம்:சூரியன் உதயமாவது போன்று உள்ள புகைப்படம் அல்லது வரைபடத்தை கிழக்கு பக்கமாக வைத்தால், சமூகத்துடன் ஆன உறவுகள் மேம்படும்.

 மீன் தொட்டி:மீன் தொட்டியை உங்களது வீட்டின் வட கிழக்கு திசையில் வைத்தால், எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் விலகும்.

குடும்பம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
No comments

Powered by Blogger.