உங்கள் வீட்டில் நிரந்தரமாக மகா லட்சுமி வாசம் வேண்டுமா? | Sattaimuni Nathar


உங்கள் வீட்டில் நிரந்தரமாக லட்சுமி வாசம் வேண்டுமா? .எல்லோர் வீட்டிலும் சாம்பிராணி போடுவது வழக்கம் தான்.
ஆனால் எந்த விதைகளைக் கொண்டு தூபம் போட்டால் எதற்குத் தீர்வு கிடைக்குமெனத் தெரியுமா?

சந்தனத்தில் தூபமிட தெய்வ கடாக்ஷம் கிடைக்கும்.

சாம்பிராணி தூபமிட கண்திருஷ்டி, பொறாமை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

ஜவ்வாது தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

அகிலி தூபமிட குழந்தைப் பேறு உண்டாகும்.

துளசி தூபமிட காரியத்தடை,
திருமணத்தடை விலகும்.

தூதுவளை தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும்.

வெண்கடுகு தூபமிட பகைமை நீங்கும்.

வெண் குங்கிலியம் தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.நாய்கடுகு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவர்.

மருதாணி விதை தூபமிட சூனிய கோளாறுகள் நீங்கும்.

கரிசலாங்கண்ணி தூபமிட மகான்களின் ஆசி கிட்டும்.

வேப்பம்பட்டை தூபமிட ஏவல், பில்லி விலகும்.

நன்னாரிவேர் தூபமிட ராஜவசியம் உண்டாக்கும்.

வெட்டிவேர் தூபமிட காரியசித்தி உண்டாகும்.

அருகம்புல் தூபமிட சகல தோஷ நிவாரணம் கிடைக்கும்

வேப்ப இலைத்தூள் தூபமிட சகல நோய் நிவாரணம் கிடைக்கும்.

மருதாணி இலைத்தூள் தூபமிட லட்சுமி வாசம் நிலைக்கும்.மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், இவற்றை முறையே செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி முதலான நாட்களில் தூபமிட்டு வாழ்வில் அனைத்து வளமும் பெறலாம்.
No comments

Powered by Blogger.