குழந்தைகள் உள்ள அனைவரும் கட்டாயம் பார்க்கவும் -Sattaimuni Nathar


குழந்தைக்கு எந்த மாதத்தில் மொட்டை அடிக்குறது நல்லது

குழந்தைக்கு குலதெய்வம் கோவிலில் ஒரு வயதில் மொட்டை அடிப்பது தான் நம் பாரம்பரியம். என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் முடியை இழக்க விரும்புவதில்லை எவ்வளவு செலவு செய்தாவது முடியை இழக்க கூடாது என்று நினைப்பார்கள்.ஆனால் தன் சொந்தங்களின் நலனுக்காக தன் முடியை இறைவனுக்கு காணிக்கை ஆக்குவதன் அர்த்தம் என்ன? முடி என்பது ஒருவரின் அழகு மற்றும் பெருமையுடன் சம்மந்தப்பட்டது.
அதனால் முடியை இறக்குவதன் மூலம் தனது ஆணவம் மற்றும் அகந்தையை கடவுள் முன் இறக்குவதாக அர்த்தம். ஆனால் பிறந்த குழந்தைக்கு ஒரு வயதில் மொட்டை போடவில்லை என்றால் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படும் என்று நம் வீட்டின் பெரியவர்கள் சொல்லி கொண்டே இருப்பார்கள்.மொட்டை அடித்தால் எல்லாம் சரி ஆகிவிடுமா? என்று வாதங்கள் செய்தாலும் மொட்டை அடிப்பதன் மூலம் குழந்தைக்கு இவ்வளவு நன்மைகள் கிடைப்பது அறிந்து தான் நம் முன்னோர்கள் இந்த முறையை பின்பற்றி வருகின்றனர்.

குழந்தை தன் தாயின் வயிற்றில் பத்து மாத காலம் உள்ளது. வயிற்றில் தண்ணீர் மட்டுமா உள்ளது இரத்தம், மலம், மற்றும் பல இருக்கின்றனர். பிறந்த குழந்தையை சுத்தம் செய்து தான் தருவார்கள் ஆனாலும்
அந்த கிருமிகள் குழந்தையின் மயிர்க்கால்களில் தங்கி குழந்தைக்கு ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்தும். மொட்டை அடிப்பதால் அவைகள் அகற்றப்பட்டு புதிய முடிகள் வளரும் போது குழந்தை ஆரோக்கியமாக வளரும். இதனால் தான் நம் வீட்டின் பெரியவர்கள் தெய்வகுத்தம் என்று சொல்லி நம்மை பயமுறுத்தி வைத்துள்ளனர். அவ்வாறு சொன்னால் தான் நாம் செய்வோம் என்று அவர்கள் எண்ணிருப்பார்கள்.நம்முடைய வேளை பளுவை காரணம் காட்டி குழந்தைக்கு மொட்டை போடுவதை தள்ளிப்போட வேண்டாம்.

1-3 வயதிற்குள் கட்டாயம் மொட்டை போடவேண்டும். அதற்காக குழந்தைக்கு ஒரு வயது நிறைவுறும் முன்பும் போடக்கூடாது ஏனென்றால் குழந்தையின் தலையில் உள்ள உச்சிக்குழி மூடாமல் இருக்கும் அதனால் தான் ஒரு வயதில் போட வேண்டும்.3 மாதம், 5 மாதம் , 7 வது மாதம் இப்படி எல்லாம் போடுவது குழந்தைக்கு நல்லது அல்ல. குழந்தைக்கு மொட்டை அடித்தவுடன் உடல் உஷ்ணத்தால் காய்ச்சல் வர வாய்ப்பு உண்டு. அதனால் நல்ல சுத்தமான சந்தனம் பூசி விட வேண்டும்.
No comments

Powered by Blogger.