நினைத்தது நடக்கும் பைரவர் வழிபாடு-Sattaimuni Nathar

சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவரான பைரவரை வணங்குவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் மற்றும் என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்று பார்ப்போம்.


திங்கள் கிழமை அன்று வில்வம் இலைகளைக் கொண்டு பைரவரை பூஜித்தால் சிவனின் அருள் கிடைக்கும்.திங்கட்கிழமைகளில் வரும் சங்கடஹரசதுர்த்தியன்று மஞ்சள் நீர புஸ்பங்களால் ஆன மலர் மாலை அணிவித்து ஜவ்வரிசிப்பாயசம்,
அன்னம் படையல் இட்டு பூஜை செய்தால் தாயாரின் உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும். அன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பு மற்றும் புனுகு சாத்தினால் கண் சம்மந்தப்பட்ட நோய்கள் விலகித் தெளிவான பார்வை கிடைக்கும்.


செவ்வாய்க்கிழமைகளில் வரும் ராகுவேளையில் (மாலை 3-4.30) பைரவருக்குச் செவ்வரளி மாலை சாத்தி, துவரம்பருப்புப் பொடி சாதம் செய்து , செம்மாதுளம்பழம் படையலிட்டால் சகோதரர்களுக்கு இடையே இருக்கும் பகை நீங்கி ஒற்றுமை நிலைக்கும். செவ்வாய்க்கிழமைகளில் மாலை நேரத்தில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நாம் இழந்த பொருள் திரும்பக் கிடைக்கும்.புதன் கிழமை மாலை வேலையில் மரிக்கொழுந்து மாலை சாத்தி, பாசிப்பருப்புப் பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்புப் பாயசம் செய்து படையல் இட்டால் மாணவர்கள்
கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிடைக்கும்.வியாழக்கிழமை அன்று மனமார விளக்கேற்றி வழிபட்டால் நம்மை பிடித்துள்ள ஏவல், பில்லி மற்றும் சூனியம் ஆகியவை விலகி மன நிம்மதி கிடைக்கும்.


வெள்ளிக்கிழமை வரும் ராகுவேளைகளில் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து, தாமரை மலர்களாலான மாலை சூட்டி, அவல் கேசரி, பானகம், சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபட்டால் மனதிற்குப் பிடித்த வகையிலும், திருமணம் தடையின்றியும் நடக்கும். மாலை நேரத்தில் வில்வ இலைகள் கொண்டு பைரவருக்கு பூஜை செய்து வந்தால் செல்வம் பெருகும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.


சனிக்கிழமைகளில் பைரவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நன்மைகளை அடையலாம்.சனி பகவானுடைய குரு பைரவர் ஆவர்.


பிரதி ஞாயிற்றுக்கிழமை வரும் ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை சாற்றி, ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். கடன் தொல்லைகள் தீரும். மேலும் பைரவருக்கு புனுகு சாத்தி, முந்திரி பருப்பு மாலை சாற்றி வழிபட்டால் நலன் பெருகும். இவ்வாறு வாரத்தின் ஏழு நாட்களும் நாம் செய்யும் கால பைரவரின் வழிபாடு நமக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றி திருமணத் தடைகளை நீக்கி சகல நன்மைகளைத் தரும்.No comments

Powered by Blogger.