உப்பு வெற்றிலை இருந்தாலே போதும் கடன் பிரச்சனையே வராதுஉப்பு வெற்றிலை இருந்தாலே போதும் கடன் பிரச்சனையே வராது
கடன் பிரச்சனை தீர பரிகாரங்கள்

கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்று சொல்வார்கள்.
கடன் வாங்கிவிட்டு அதை கட்ட இயலாமல் தவிப்பது நரகவேதனைக்கு சமமானது.

வாழ்க்கையின் அத்தனை பிடிகளும் அந்த நேரத்தில் போய்விடும். கடன் நிறைய இருக்கு
வட்டி கட்டிக்கிட்டே இருக்கோம். எப்போ இதை அடைப்போம் என தவிப்போம்.

பொதுவாக ஒரு நல்ல நாள் பார்த்து கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்க
மாட்டோம் என்பது நம்பிக்கையாகும். அதற்காக சில பரிகாரங்கள் உள்ளது
அது பற்றி இங்கு பார்ப்போம்.

கடன் பிரச்சனை தீர சில பரிகாரங்கள் :

ஒவ்வொரு வெள்ளியும் காலை குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை
கடைக்கு சென்று மஹாலட்சுமியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு
பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலட்சுமி
வரவிற்கு குறைவே இருக்காது.


வெள்ளிக்கிழமை காலை 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம்
அனைத்தும் பூஜையில் வைத்து லட்சுமி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும்
ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை
ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும்.


வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்சனை
மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.

எவ்வளவு பணம் வந்தும் சேமிக்க முடியவில்லை என கவலையில் உள்ளோர்
தங்களின் உடைகள் வைக்கும் பீரோ மற்றும் பணம் வைக்கும் இடங்களில்
கரு நீல துணியை விரிப்பாக உபயோகித்து வர பண விரயம் நிற்கும்.

பண பிரச்சனைகளால் மிகுந்த அவதிக்கு ஆளானோர், ஒரு வெள்ளியன்று யாரும்
பார்க்காத நேரத்தில் வேப்ப மரம் ஒன்றில் சிறிய துளையிட்டு அதில் சிறிய சதுர வடிவ
வெள்ளியை வைத்து பின்பு மூடி விடவும். முன்னேற்றம் பின்பு கண் கூடாக தெரியும்.

நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால்
தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண்
விரயம் கட்டுப்படும்.

காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய்
நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.

கடன் கொடுத்தோ, பெற்றோ அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணெயில்
உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.

எவ்வளவு பெரிய கடன் சுமையால் பாதிக்க பட்டிருந்தாலும் காஞ்சிபுரத்தில்
அமர்ந்து அருள் பாலித்துவரும் காமாட்சி அம்மனை, ஒரு வளர்பிறை சித்திரை
நட்சத்திரத்தில் பட்டு புடவை சாற்றி வழிபடுவோர்க்கு, நிச்சயம் கடன் சுமையில்
இருந்து மீட்டு, மன நிறைவான வாழ்க்கை உருவாகும்.

4 comments:

  1. ஐயா நான் இலங்கையில் இருக்குறேன் எனக்கு இப்போது 46 வயது.இதுவரையில் என் வாழ்வில் கடன் பிரச்சினை தீராத நோயாக இருக்குறது.உங்கள் வீடியோ ஒன்றில் அதிகலையில் கல்உப்பு எடுத்து கையில் வெய்த்து ஓடும் நீரில் கரைக்க சொல்லி இருந்தது.அதை செய்வது பற்றி எனக்கு தெளிவாக விளங்க வில்லை . தயவுசெய்து உங்களைய் தொடர்புகொள்ள முடிந்தால் மிகவும் சந்தோசம்.தொடர்புஎண்ணை அறியப்படுத்தவும். எனக்கு உதவவும்.நன்றி

    ReplyDelete
  2. thank you so much ayya...nandri nandri nandri.... i will always watch your channel and the best....

    ReplyDelete

Powered by Blogger.